மேலும் செய்திகள்
விற்பனைக்கு வந்த அபூர்வ நண்டு
17-Feb-2025
திருப்பூர்; தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று 65 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தன.வஞ்சிரம் கிலோ, 700 - 800 ரூபாய், வாவல், 750 - 850 ரூபாய், மத்தி, 80, ஊழி, 400, பாறை, 150, சங்கரா, 350, படையப்பா, 300, நண்டு, 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதிகாலை முதலே மீன்களை வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர். காலை 9:00 மணி வரை விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது. விலை குறைவு என்பதால், மொத்த வியாபாரிகள் அதிகளவில் மீன்களை விற்பனைக்கு வாங்கிச் சென்றனர்.ேஹாலி பண்டிகை நிறைவால், வடமாநிலத்தவரை அதிகளவில் மீன் மார்க்கெட்டில் காண முடிந் தது. விலை குறைவு என்றாலும் வரத்து இயல்பை விட அதிகம் என்பதால், மீன்கள் தேக்கமானது.
17-Feb-2025