உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போட்டோ, வீடியோகிராபி பயிற்சி பெற விருப்பமா?

போட்டோ, வீடியோகிராபி பயிற்சி பெற விருப்பமா?

திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவு, கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில்,'இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சி' வகுப்பு துவங்க உள்ளது; பயிற்சிக்கான நேர்காணல் நாளை (28ம் தேதி) நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, எழுத படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்; பயிற்சிக்கு கட்டணம் இல்லை.இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது; தேநீர் மற்றும் மதிய உணவு இலவசம். 'கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, விஜயாபுரம், திருப்பூர் 641606' என்ற முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும்; முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க கடன் ஆலோசனை வழங்கப்படும். மேலும் விவரங் களுக்கு 94890 43923 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை