உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைய அதிகாரிகள் அழைப்பு

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைய அதிகாரிகள் அழைப்பு

உடுமலை; தமிழக அரசு சார்பில், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்படும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 75 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.2.50 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேர தகுதி பெற்றவர்கள்.இத்திட்டத்தின் கீழ், விபத்து மரண உதவித்தொகையாக, ரூ.ஒரு லட்சம், இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித்தொகை அவரை சார்ந்தோருக்கு ரூ.2,500, மகனின் திருமணத்திற்கு ரூ.8 ஆயிரம், மகளின் திருமணத்திற்கு, ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.மேலும் உறுப்பினர்களின், குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும், 30க்கும் மேற்பட்ட நோய்களில் உறுப்பினர் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு, தற்காலிக இயலாமை உதவித்தொகை, மாதம் ரூ.1,000 வழங்கப்படுகின்றது.எனவே, சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வி.ஏ.ஓ., மற்றும் தாலுகா அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ