உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  முழுமை பெற்றதா எஸ்.ஐ.ஆர். கணக்கீடு?

 முழுமை பெற்றதா எஸ்.ஐ.ஆர். கணக்கீடு?

தே ர்தல் கமிஷன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வீடு, வீடாக சென்று, கணக்கெடுப்பு படிவத்தை வினியோகித்து, அந்த படிவத்தை பூர்த்தி செய்து, அடுத்த முறை வரும் போது உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறினர். n திருப்பூர் நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில், இடம் பெயர்ந்த வாக்காளர்கள் அதிகம். ஒரு வார்டில் இருந்து அருகேயுள்ள வார்டு அல்லது கிராமங்களுக்கு இடம் மாறியவர்களும் இருந்தனர். அவர்களை தேடி பிடிக்க முடியாமல் பி.எல்.ஓ.,க்கள் திணறினர்; இதில் பலரது பெயர் விடுபட்டு போனது. n ஒவ்வொரு வார்டிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தும், சிலருக்கு எஸ்.ஐ.ஆர்., திருத்தப்படிவம் வழங்கப்படவில்லை. அவர்களது படிவங்கள் 'மிஸ்' ஆகி விட்டது என பி.எல்.ஓ.,க்கள் கூறினர். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்து 'பிரின்ட்' எடுத்து தருவதாக கூறியும்நடக்கவில்லை. n ஆசிரியர்களாக பணிபுரியும் பி.எல்.ஓ.,க்கள் தங்களது ஆசிரியப் பணியுடன், எஸ்.ஐ.ஆர்., பணியையும் மேற்கொள்ள வேண்டியிருந்த நிலையில் நேரம் போதாமையால் திணறினர். இதுவும், பணி முழுமை பெறாமல் போனதற்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சியினரின் பல்வேறு கருத்துகள்: மும்முறை சந்திப்புதி.மு.க. நம்பிக்கை ஈஸ்வரமூர்த்தி, தி.மு.க., பகுதிசெயலாளர், கொங்கணகிரி: திருப்பூர் பகுதியில் வெளியூர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்; அவர்கள் தங்கள் சொந்த ஊரில் ஓட்டளிக்கத் தான் விரும்புகின்றனர். 2002 வாக்காளர் விவரங்களை சேகரிக்க முடியாமல், பலர் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை திரும்ப கொடுக்கவில்லை. இறந்த வாக்காளர்களை நீக்க வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம்; எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, அது நடந்திருக்கிறது. எஸ்.ஐ.ஆர்., பணியில் பி.எல்.ஓ.,க்களுடன் உடன் சென்று, வாக்காளர் விவரங்களை சரி செய்தோம்; கிட்டத்தட்ட, ஒவ்வொரு வாக்காளரையும், 3 முறை சந்தித்துள்ளோம்; இதுவே எங்களுக்கு பலம். இதனால், வரும் தேர்தலில், 90 சதவீத ஓட்டுகள் பதிவாகும்; ஆனால், இது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என சொல்ல முடியாது. 'எஸ்.ஐ.ஆர். 2.0' தான் முக்கியம்அ.தி.மு.க. சொல்கிறது ஹரிஹரசுதன், அ.தி.மு.க., பகுதி செயலாளர்,கோல்டன் நகர்: எஸ் .ஐ.ஆர்., பணி முழுமையாக வரவேற்க வேண்டியது; சிறப்பாக செய்துள்ளனர். எனினும், கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி வீடு, வீடாக சென்று எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கியிருக்க வேண்டும். இரட்டை பதிவுகள், இறப்பு நீக்கப்பட்டிருக்கிறது; இதனால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஜன., 19 வரை மேற்கொள்ள இருக்கிற 'எஸ்.ஐ.ஆர்., 2.0' மிக முக்கியம். அரசியல் கட்சியினர் விழிப்புடன் இருந்து, விடுபட்ட வாக்காளர்களை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரட்டை வாக்காளர்கள் நீக்கம்பா.ஜ. மகிழ்ச்சி சீனிவாசன், பா.ஜ., மாவட்ட தலைவர், திருப்பூர் வடக்கு: எஸ்.ஐ.ஆர்., பணி என்பது, இயற்கையாக நடக்க வேண்டிய ஒன்று தான். இதை காங்., கட்சி உட்பட அனைத்து கட்சியினரும் ஏற்கின்றனர்; மாறாக, அரசியலுக்காக எதிர்க்கின்றனர். திருப்பூரை பொறுத்தவரை, வேலை வாய்ப்பு தேடி, இடம் பெயர்ந்து வந்துள்ள வாக்காளர்கள் தான் மிக அதிகம். அவர்கள், தங்கள் சொந்த ஊரில் ஓட்டளிக்க தான் விரும்புகின்றனர். அவர்கள் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் இங்கு ஓட்டளிப்பர்; உள்ளாட்சி தேர்தலில் தங்கள் சொந்த ஊரில் தான் ஓட்டளிப்பர். நீக்கப்பட்ட வாக்காளர்களில், 99 சதவீதம் பேர், இரட்டை வாக்காளர்கள் தான்; காங்., கட்சி கூட, எஸ்.ஐ.ஆர்., பணியை ஆதரிக்கிறது. 60 நாள் கால அவகாசம் இருக்கிறது; உண்மையான வாக்காளர்கள் இணையலாம். எஸ்.ஐ.ஆர். அதிர்ச்சிகாங்கிரஸ் வேதனை கோபிநாத் பழனியப்பன் காங்., தேசிய செயலர்: எஸ்.ஐ.ஆர்., என்பது அதிர்ச்சியான விஷயம். மாநிலத்தில், அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட, 5வது மாவட்டம் திருப்பூர்; 25 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில், தொழிலாளர் வர்க்கம் தான் அதிகம். அவர்களுக்கு எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூர்த்தி செய்யக்கூட தெரியவில்லை. 2002ல் தன் பெற்றோரின் வாக்காளர் பட்டியல் விவரத்தையும் கொடுக்க முடியவில்லை. விடுபட்ட ஓட்டுகள்நாம் தமிழர் 'பகீர்' சுரேஷ் பாபு, இணை செயலாளர், நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை: எஸ்.ஐ.ஆர்., பணியை தி.மு.க.,வினர் எதிர்த்தாலும், அக்கட்சியினர், அப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். பி.எல்.ஓ.,க்களுடனே சென்று, வாக்காளர் பட்டியலை சரி செய்தனர். ஆனால், மற்ற கட்சிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், தி.மு.க.,வுக்கான ஓட்டுகள் வெளியேறியிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், திருப்பூர் வடக்கு, தெற்கில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டிருக்கிறது. அங்கு, இஸ்லாமியர்கள் உட்பட கடந்த தேர்தலில் ஓட்டளித்த பலரின் ஓட்டுகள் விடுபட்டிருக்கிறது; ஒரு பூத்துக்கு, 50 முதல், 100 ஓட்டு விடுபட்டிருக்கும். கால அவகாசம் குறைவு த.வெ.க. ஆதங்கம் பாலமுருகன், த.வெ.க., மாநகர் மாவட்ட செயலாளர்: கால அவகாசம் மிகக்குறைவு. எஸ்.ஐ.ஆரை புரிந்து கொள்ளவே, 2, 3 வாரம் ஆகி விட்டது. 6 மாததிற்கு முன் இப்பணியை செய்திருக்க வேண்டும். பி.எல்.ஓ.,க்கள் பலர், நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லவே இல்லை. குறிப்பிட்ட ஒரு இடத்தில் அமர்ந்து, வாக்காளர்களை வரவழைத்து எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கினர். திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதியில் மட்டும், 2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; எந்த மாதிரியான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பதை கணிக்க முடியவில்லை. இனி, தகுதியிருந்தும் வாக்காளர்பட்டியலில் இணைய மாட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை