உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலெக்டர் அலுவலகத்திலேயே இப்படியா?

கலெக்டர் அலுவலகத்திலேயே இப்படியா?

திருப்பூர்; திருப்பூர், கலெக்டர் அலுவலகம், 30 க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்களை உள்ளடக்கி, ஏழு தளங்களுடன் செயல்படுகிறது. அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.ஒருமுறை பயன்படுத்தும் கப்களில் டீ, காபி அருந்தும் அரசு அலுவலர்கள் பலர், அந்த கப்களை, ஜன்னல் வழியே துாக்கி வீசிவிடுகின்றனர். அவை, கலெக்டர் அலுவலக கட்டடத்தை ஒட்டி, வந்து விழுகின்றன. அதேபோல், அலுவலக குப்பை தொட்டிகளில் சேகரமாகும் டீ கப், கழிவு காகிதங்களை, கலெக்டர் அலுவலக பின்புறம் குப்பை தொட்டி அருகே, தரையிலேயே கொட்டுகின்றனர்.நேற்று காலை, கலெக்டர் அலுவலக முன்பகுதியில், சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. அதேநேரம், கலெக்டர் அலுவலக பின்புறம், பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில், பேப்பர் கப், காகித கழிவு முதலானவை, அகற்றப்படாமல், தரையில் குவிந்து கிடந்தன.சில அரசு அலுவலர்களோ, துாய்மை செய்கிறோம் என்கிற பெயரில், தங்கள் அலுவலகத்திலிருந்த தேவையற்ற கோப்புகளை, ஜன்னல் வழியே துாக்கி விசி எறிந்துவிட்டனர். அவை, கலெக்டர் அலுவலக கட்டடம் அருகே கட்டுகட்டாக விழுந்து கிடக்கின்றன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கும் குப்பை கழிவுகளை, மாநகராட்சி வாகனம் மூலம், தினசரி அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை