உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் ஐ.டி., சோதனை

சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் ஐ.டி., சோதனை

உடுமலை: உடுமலை சுகுணா புட்ஸ் நிறுவனத்தில், 4வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. உடுமலையில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவன அலுவலகம் மற்றும் கணபதிபாளையம், வரதராஜபுரத்திலுள்ள கோழித்தீவன உற்பத்தி தொழிற்சாலைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், 30 பேர், கடந்த, 23ம் தேதி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குரிய கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, நிறுவன ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு வருகின்றனர். பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, 4 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நீண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !