உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெய்ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சபை பதவியேற்பு

ஜெய்ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சபை பதவியேற்பு

திருப்பூர், அக். 4-அவிநாசிபாளையம், ஜெய் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சபை பதவியேற்பு விழா நடந்தது. பள்ளி தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் முத்து அருண் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக டாக்டர் செல்வகுமார், 'டைம்' இன்ஸ்டிடியூட் இயக்குனர்(திருப்பூர் மாவட்ட செயல்பாடுகள்) சின்னையன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சபை உறுப்பினர்களுக்கு 'பேட்ஜ்' மற்றும் கொடிகள் வழங்கினர். ஜெய் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் யமுனாதேவி முன்னிலை வகித்தார். ஜெய் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி முதல்வர் கலைச்செல்வி பங்கேற்றார். பதவியேற்பு உறுதிமொழி மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. பள்ளி நிர்வாக அலுவலர் சரவணன், சிவசுதன், விளையாட்டு ஆசிரியர் தவசியப்பன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ