மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
31-Oct-2025
திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி, உடுமலை, வித்யசாகர் கலைக் கல்லுாரியில் நடந்தது. அதில், மூத்தோர் பிரிவில், திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி, செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், பொருளாளர் சுருதி ஹரிஷ், பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். முன்னதாக, சிறந்த பயிற்சியாளருக்கான விருது பெற்ற பள்ளி உடற்கல்வி இயக்குனர் நல்லசிவம் மற்றும் மாணவ, மாணவியருக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
31-Oct-2025