மேலும் செய்திகள்
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நாளை துவக்கம்
24-Oct-2025
உடுமலை: திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதி நேர நகை மதிப்பீடு மற்றும் நுட்பங்கள் பயிற்சி வரும் நவ. 1ல் துவங்குகிறது. திருப்பூர் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் பிரபு கூறியிருப்பதாவது: திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதி நேர நகை மதிப்பீடு மற்றும் நுட்பங்கள் பயிற்சி வரும் நவ. 1ல் துவங்குகிறது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள், தாராபுரம், சின்னக்கடை வீதியில் செயல்படும், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட்டுவருகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர், 04258 220640 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இப்பயிற்சி, முதல் இரண்டு வாரங்கள், ஞாயிற்றுக்கிழமையும்; மூன்றாவது மற்றும் நான்காவது வாரம், சனிக்கிழமையும் நடைபெறும். மொத்தம் 17 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்கான கட்டணமாக, 4,550 ரூபாய் செலுத்த வேண்டும். இப்பயிற்சியில், நகையின் தரம் அறியும் உபகரணங்களும் வழங்கப்படும். 40 மணி நேர வகுப்பறை பயிற்சி; 60 மணி நேரம் செயல்முறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்து சான்று பெறுவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இப்பயிற்சிக்கு வயது வரம்பு இல்லை. இப்பயிற்சியில் தேர்ச்சி பெறுவோர், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக சேரலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
24-Oct-2025