உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு; பல கிராமங்கள் பாதிக்கும் நிலை

கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு; பல கிராமங்கள் பாதிக்கும் நிலை

உடுமலை; உடுமலை அருகே, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருவதால், பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இதில், குடிமங்கலம், சிந்திலுப்பு, பொட்டையம்பாளையம் உள்ளிட்ட நீர் உந்து நிலையங்களில் இருந்து, கிராமங்களுக்கு பிரதான குழாய் பதிக்கப்பட்டுள்ளது.இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது; சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தாமதம் ஆவதால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.தற்போது, சனுப்பட்டி அருகே, குழாய் உடைந்து, சிறு பாசன கால்வாயில் செல்வது போல, குடிநீர் வீணாக சென்று வருகிறது. நாள்தோறும், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர், வீணாக சென்றும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், சனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.கிராம மக்கள் கூறியதாவது: வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே கூட்டுக்குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை பிடித்து இருப்பு வைத்து பயன்படுத்துகிறோம்.பிரதான குழாய் உடைப்பு ஏற்படும் போது சீரமைக்க காலதாமதம் ஆவதால், வினியோகத்துக்கு 15 நாட்களுக்கு மேலாகிறது. பாதுகாப்பான மற்றும் சீரான குடிநீர் வினியோகத்துக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ