உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜூனியர் - சீனியர் பெண்கள் கபடி

ஜூனியர் - சீனியர் பெண்கள் கபடி

திருப்பூர்: திருப்பூரில் நாளை (8ம் தேதி) நடக்கும் மாவட்ட ஜூனியர் சிறுமியர், சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி தேர்வு போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் அறிக்கை: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், திருப்பூர் மாவட்ட இளையோர் சிறுமியர் அணி, மாவட்ட பெண்கள் அணி தேர்வு வரும், 8ம் தேதி, திருப்பூர் மாவட்ட கபடி கழக மைதானத்தில் நடக்கவுள்ளது. காலை 9:00 மணிக்கு துவங்கும். ஆர்வமுள்ள அணிகள், சிறுமியர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கலாம். சிறுமியர் பிரிவில் பங்கேற்பவர் 2005, டிச. 28ம் தேதிக்கு பின் பிறந்திருக்க வேண்டும். வயது, ஆதார், பள்ளி மாற்றுச்சான்றிதழ்கள் அவசியம்; 65 கிலோவுக்குள் இருக்க வேண்டும். சீனியர் பெண்கள் அணிக்கு வயது வரம்பு இல்லை; 75 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரி, பொது சிறுமியர் அணிகள், மகளிரணிகள் சாம்பியன்ஷிப் கபடி தேர்வு போட்டியில் பங்கேற்கலாம். தேர்வாகும் அணிக்கு முதல்பரிசு, 20 ஆயிரம் மற்றும் கோப்பை. பங்கேற்கும் அணி, சிறுமி, வீராங்கனைகளுக்கு காலை, மதியம் உணவு வழங்கப்படும். சிறுமியர், பெண்கள் அணிகள் கலந்து விளையாடலாம். அதிலிருந்து தேர்வுக்குழுவினரால் சிறப்பாக விளையாடும் சிறுமி, பெண் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வாகும் அணியினர் நவ. 21ம் தேதி திருச்சியில் நடக்கும் மாநில கபடி போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை