உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தீராத சாக்கடை பிரச்னை ஜெ.வி. கார்டன் தவிப்பு

 தீராத சாக்கடை பிரச்னை ஜெ.வி. கார்டன் தவிப்பு

அவிநாசி: அவிநாசி, ராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஜெ.வி. கார்டனில் 30 குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் ராயம்பாளையத்திலிருந்து, நடுவச்சேரி செல்லும் பிரதான ரோட்டில் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு அடி அகலம்; மூன்றடி ஆழம் உள்ள சாக்கடை கால்வாயில் துப்புரவு பணியாளர்கள் முறையாக துப்புரவுப்பணி மேற்கொள்ள முடிவதில்லை. கால்வாய் சுவர்கள் இடிந்து சேறும், சகதியுமாக தேங்கி நிற்கிறது. ஏழு ஆண்டாக குடியிருப்பாளர்கள் அவதியுறுகின்றனர். மழைக்காலங்களில் கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் வழிந்து ஓடுகிறது. குடியிருப்பாளர்கள் கூறுகையில், ''பலமுறை மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மனையிட அனுமதி வழங்கும் முன், ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். இதைச் செய்யாததால் குடியிருப்பாளர்கள் சிரமப்படுகிறோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை