பிரன்ட்லைன் பள்ளியில் கலாம் பசுமைக்கனவு திட்டம்
திருப்பூர்; திருப்பூர், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினம் மற்றும் உலக இயற்கை வள பாதுகாப்பு நாள் கொண்டாடப்பட்டது. அப்துல்கலாமின் 'பசுமையான இந்தியா' கனவை நனவாக்கும் வகையில், பள்ளி தாளாளர் சிவசாமி வழிகாட்டுதலில், 500க்கும் மேற்பட்ட விதைப்பந்து, மாணவர்கள் வாயிலாக, மழைக்காலம் துவங்குவதற்கு முன், ஆங்காங்கே விதைக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியின் பசுமை மீட்புக்குழு நிர்வாக அதிகாரி சக்திவேல், மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, மரம் வளர்ப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் மரங்கள் என்னென்ன நன்மைகளை தருகிறது என்பது குறித்தும் விரிவாக பேசினார். அவரவர் வீடுகளில் மரக்கன்று நட்டு பசுமையை காக்க தங்கள் பங்களிப்பை வழங்குவதாக, மாணவர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். பள்ளி செயலாளர் சிவகாமி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.