மேலும் செய்திகள்
சிவன்மலையில் திருக்கல்யாண வீதியுலா
29-Oct-2025
திருப்பூர்: சிவன்மலையில் கந்த சஷ்டி விழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது. சுவாமி கோவிலை வலம் வந்து மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சென்றார். தினமும் காலை மற்றும் மாலை அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடந்தது. சூரசம்ஹார விழா, 27ம் தேதி இரவு நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழாவும், சுவாமி திருமலைக்கு எழுந்தருளலும் நடந்தது. ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.
29-Oct-2025