கிட்ஸ் கிளப் பள்ளி மாணவியர் சாதனை
திருப்பூர், ; திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவிகள் தியாஸ்ரீ, பிருத்விகா ஆகியோர் 102 நிமிடங்கள் தொடர்ச்சியாக கம்பு சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று நோபல் உலக சாதனை படைத்துள்ளனர். பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக் உள்ளிட்டோர் மாணவிகளை வாழ்த்தினர்.