உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கொல்லம் சிறப்பு ரயில் பொங்கல் வரை நீட்டிப்பு

 கொல்லம் சிறப்பு ரயில் பொங்கல் வரை நீட்டிப்பு

திருப்பூர்: ரயில் டிக்கெட் முன்பதிவு, கூட்ட நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருப்பதால், கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம், பயணிகள் வசதிக்காக பொங்கல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, மே மாதம் ைஹதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07193) அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமை தோறும் இரவு, 11:10க்கு புறப்படும் ரயில், திங்கள் காலை, 7:10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, திங்கள் காலை 10:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரயில் (எண்:07194) செவ்வாய் மாலை, 5:30க்கு ைஹதராபாத் சென்றடைகிறது. இந்த வாராந்திர ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு, பயணிகள் கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிறப்பு ரயில் இயக்கம், 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ைஹதராபாத்தில் இருந்து புறப்படும் ரயில், டிச. 6ம் தேதி முதல் ஜன. 17ம் தேதி வரையும், கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் டிச. 8ம் தேதி முதல் ஜன. 19ம் தேதி வரையும் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில், நான்காவது முறையாக இந்த ரயிலின் இயக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை