உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மழலையர் விளையாட்டு விழா

 கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மழலையர் விளையாட்டு விழா

திருப்பூர்: வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் விளையாட்டு விழா நடந்தது. மாணவ, மாணவியர் ஒலிம்பிக் ஜோதி ஏந்தி வந்து சமாதான புறா பறக்கவிட்டனர். தேசிய கொடியேற்றப்பட்டது. தலைமையாசிரியை பிரியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் பேரக்கம்பாளையம் சண்முகத்துக்கு தாளாளர் வி.எஸ்.சண்முகம் பொன்னாடை அணிவித்தார். செயலாளர் சக்திவேல் நினைவுப்பரிசு வழங்கினார். நிர்வாக இயக்குனர் அசோக்குமார், முதல்வர் விஷ்ணுப்பிரியா முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கான போட்டிகளில் வென்றவர்களுக்கு ராசாத்தா வலசு மனோஜ் பரிசு வழங்கினார். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை