உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவாச்சாரியார்களுக்கு பாராட்டு

சிவாச்சாரியார்களுக்கு பாராட்டு

திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தின் நவராத்திரி வழிபாட்டு குழு, பிரேமா கல்வி நிலையம், ஆதீஸ்வர் டிரஸ்ட் சார்பில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. ஆதீஸ்வர் டிரஸ்ட் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், பிரேமா கல்வி நிலையத் தலைவர் ரவி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், செயல் அலுவலர் சீனிவாசன், ரோட்டரி நவராத்திரி குழு செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வடக்கு ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ