உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

உடுமலை: 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ள, அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி அனுசுயா, நடப்பாண்டு 'நீட்' தேர்வில், 458 மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரி மருத்துவ கல்லுாரியில், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளார்.இவருக்கு, பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார், உதவித்தலைமையாசிரியர் முத்துக்குமாரசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் ஏழுமலை, தொட்டியம்மாள், பாராட்டு விழாவில் தேசியக்கொடி ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை