காந்திபுரம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் 11ல் கும்பாபிேஷகம்
அவிநாசி; அவிநாசி, காந்திபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிேஷகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. வரும் 8ம் தேதி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி ஆகியவை நடக்கின்றன. 9ம் தேதி முதல் கால யாக பூஜை; 10ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், அஷ்ட பந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி ஆகியன நடக்கின்றன. 11ல் நான்காம் கால யாக பூஜை நடைபெறும்; கலசங்கள் புறப்பாடு நடைபெற்று அன்றுகாலை 5:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் விமான கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம், ஸ்ரீ சித்தி விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், காலை 5:45 முதல் 6:00 மணிக்குள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு கும்பாபிஷேகம் ஆகியன நடக்கின்றன. மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும். மாலை ரிஷப வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி திருவீதி உலா நடக்கிறது. கும்பாபிேஷக பணிகளை அறக்கட்டளை தலைவர் சுப்ரமணிய குருக்கள், பொருளாளர் ரங்கராஜ், செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.