மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பொங்கலுார்; பொங்கலுார், ஆலாம்பாளையம் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், நாகாத்தம்மன், கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4ல் துவங்கியது. தொடர்ந்து முளைப்பாளிகை, தீர்த்த கலசம், கோபுர கலசம் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டது.நேற்று காலை புண்யாக வாசனை, பஞ்சகவ்ய பூஜை, சூரிய கும்ப பூஜை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. பின், 9:30 மணிக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், தொடர்ந்து ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை கண்டியன் கோவில் ஆதீனம் சிவசுப்பிரமணிய குருக்கள், தங்கமணி குருக்கள் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து தச தரிசனம், மகாதீபம், ஆராதனை நடந்தது. விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.