தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர்: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில், துணை, உதவி ஆய்வாளர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலர்கள், கொத்தடிமை தொழிலாளர் பணிபுரிகின்றனரா என நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.மாவட்டத்திலுள்ள செங்கல் சூளைகள், கோழிப்பண்ணை, விசைத்தறி கூடங்களில் நடத்திய ஆய்வில், கொத்தடிமை தொழிலாளர் யாரும் கண்டறியப்படவில்லை.