உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சார்பதிவாளர் அலுவலகத்தில் வசதிகள் இல்லை: பொதுமக்கள் சிரமம்

சார்பதிவாளர் அலுவலகத்தில் வசதிகள் இல்லை: பொதுமக்கள் சிரமம்

குன்னத்துார் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டப்பட உள்ளது. சார் பதிவாளர் அலுவலகம், தற்காலிகமாக இடம் பெயர்ந்து, கடந்த ஏழு மாதங்களாக சிறிய கட்டடத்தில் இயங்கிவருகிறது. ஏற்கனவே உள்ள கட்டடம் தரமானதாக உள்ளதால், சார் பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் தேவையில்லை என, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டடம் கட்டுமான பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது இயங்கும் தற்காலிக கட்டடத்தில் கழிப்பிடம், வாகன நிறுத்தும் வசதிகள் இல்லை. இதனால், பத்திரப்பதிவுக்காக வரும் மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகத்தை விரைந்து சொந்த கட்டடத்துக்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.- ஊத்துக்குளி பொதுமக்கள்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை