உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நுாலக உறுப்பினரான மாணவியர் அரசு பள்ளியில் நிகழ்ச்சி

 நுாலக உறுப்பினரான மாணவியர் அரசு பள்ளியில் நிகழ்ச்சி

உடுமலை: தேசிய நுாலக வார விழாவையொட்டி, பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு நுாலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. உடுமலை மாதிரி கிளை நுாலகம்-எண் 1 சார்பில், தேசிய நுாலக வார விழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. உடுமலை பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த, 50 மாணவியருக்கு நுாலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் விஜயா தலைமை வகித்தார். தலைமை நுாலகர் அபிராமசுந்தரி, நுாலகர்கள் பத்மகுமாரி, பாத்திமா, மாலதி முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். தமிழாசிரியர் சின்னராசு நுாலக பயன்பாடு குறித்து பேசினார். வாசகர் வட்ட நிர்வாகிகள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை