மேலும் செய்திகள்
தொழிலாளி கொலையில் வாலிபருக்கு ஆயுள்
05-Dec-2024
திருப்பூர்; காங்கயம் அருகே தம்ம ரெட்டிபாளையத்தில், கடந்த 2017ம் ஆண்டு, நடராஜ், 60 என்பவர் அதே பகுதியை சேர்ந்த குமாரசாமி,53, என்பவரை முன்விரோதம் காரணமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த குமாரசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் நடராஜனை கைது செய்தனர்.தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 3ல் கடந்த ஏழு ஆண்டு களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.குற்றவாளி நடராஜனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார்.
05-Dec-2024