மேலும் செய்திகள்
விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள்
29-Jul-2025
திருப்பூர், ; திருப்பூர், அருள்ஜோதி நகரில் வசித்த ராணி என்பவருக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் இடையே, பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. கடந்த 2017-ல் ராணி கொடுக்க வேண்டிய தவணையை கொடுக்க தவறியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், குக்கர் மூடியால் அவரின் தலையில் அடித்த பாண்டியராஜன், கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார். திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியராஜனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் விரைவு மகளிர் நீதிமன்றம், பாண்டியராஜனுக்கு, ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
29-Jul-2025