மேலும் செய்திகள்
ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு
18-Jul-2025
உடுமலை; ''பாகவதம் கதை கேட்பதும், சொல்வதும் கோடி புண்ணியத்தை பெற்று தரும்,'' என ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா பாகவதர் கூறினார். உடுமலை ராமய்யர் திருமண மண்டபத்தில், உடுமலை நாமத்வார் சார்பில் ஸ்ரீமத் பாகவதம் அன்மிக சொற்பொழிவு கடந்த 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. சொற்பொழிவில் ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா பாகவதர் பேசியதாவது: பாகவதம் என்பது கிருஷ்ணனே. பாகவதம் கதை கேட்கவோ, சொல்வதற்கோ கோடி ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். பாகவதம் கேட்டதும், படிப்பதும், சொல்வதும் மனதில் உள்ள அழுக்கை நீக்கி, பக்தி நிலைக்கு கொண்டு செல்லும். அந்த பக்தியால் அனைத்து தேவைகளும் தடை இல்லாமல் பூர்த்தியாகும். பாகவதம் ஒரு நாம புராணம். இவ்வாறு பேசினார். தொடர்ந்து வரும் 26ம்தேதி வரை மாலை, 6:30 மணி முதல் 8:30 மணி வரை சொற்பொழிவு நடக்கிறது.
18-Jul-2025