மேலும் செய்திகள்
சக்தி கல்லுாரியில் முப்பெரும் விழா
20-Sep-2024
திருப்பூர் : திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் முதுகலை ஆங்கில ஆராய்ச்சித்துறை சார்பில், 'உலகளாவிய மண்ணின் மைந்தர்களின் இலக்கியம்,' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் சுமா அலேயா. முன்னிலை வகித்தார். ஆங்கில இலக்கிய மன்ற பொறுப்பாளர் தனலட்சுமி வரவேற்றார். பொள்ளாச்சி, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி, ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் வெண்ணிலா நான்சி கிறிஸ்டினா பேசுகையில், 'இலக்கியம் என்பது ஒரு இனத்தின் வாழ்வியலுடன் பிணைந்தது. வாய்மொழி இலக்கியமே இனக்குழுக்கள் பற்றிய வரலாறு புதைந்து கிடக்கும் பொக்கிஷங்கள்; அவையே ஆதிமனிதனின் இலக்கியம். நம் நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை அவர்களின் மொழிகள் மற்றும் இலக்கிய ஆக்கங்கள் பற்றிய கருத்துகளை மாணவியர் அறிந்து கொள்ள வேண்டும்,' என்றார்.ஆங்கிலத்துறை மாணவியர் செயலாளர் மரியாநந்தி நன்றி கூறினார்.
20-Sep-2024