| ADDED : நவ 18, 2025 04:13 AM
திருப்பூர்: பவர்டேபிள் நிறுவனம் மற்றும் சைமா சங்கம் இடையே, ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 2025 ஜூன் மாதம், 7 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள், நடைமுறையில் கூலி உயர்வு வழங்கியுள்ளன. இருப்பினும், 20 பெரிய நிறுவனங்கள், கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஒப்பந்தம் செய்து கொண்டபடி, நடைமுறை கூலியில் இருந்து, 7 சதவீதம் உயர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. அதற்காக, 7ம் தேதி முதல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து பவர்டேபிள் நிறுவனத்தினர் கூறுகையில், 'சில பெரிய நிறுவனங்கள்தான் ஒப்பந்த கூலியை வழங்காமல் இழுத்தடிக்கின்றன. நியாயமான கூலி உயர்வை வழங்க முன்வர வேண்டும்' என்றனர். இதேநிலை தொடர்ந்தால், தொழிலாளர்கள் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும், எனவே, கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பில் உள்ள, 'பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், 'சைமா'வை அணுகி, பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்பதே தொழிலாளரின் எதிர்பார்ப்பாக உள்ளது.