உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறிவியல் சார்ந்தது மஹா யோகம் பயிற்சி

அறிவியல் சார்ந்தது மஹா யோகம் பயிற்சி

திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், உடல் மற்றும் மனநலத்துக்கான யோகாசன பயிற்சி முகாம் நேற்று நடந்தது.பாப்பீஸ் ஓட்டலில் நடந்த பயிற்சி முகாமுக்கு, சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். போலீஸ் கமிஷனர் லட்சுமி துவக்கி வைத்தார்.''திருப்பூரின் நெருக்கடியான தொழில் சூழலை எதிர்கொண்டு, மன நலனையும் உடல்நலனையும் பேணிக்காக்க, யோகா மற்றும் மூச்சு பயிற்சிகள் உதவும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளவேண்டிய தேவை இருப்பதால் பயணத்தின் பொழுது தங்கும் இடத்தில் எளிதாக மூச்சு மற்றும் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். உற்சாகமாக வைத்திருக்கும்'' என, ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் பேசினர்.போலீஸ் கமிஷனர் லட்சுமி பேசுகையில், ''மஹாயோகம் தியானம், மூச்சு மற்றும் யோகாசனத்தை நீண்ட வருடங்களாக செய்து வருகிறேன். எனது உடல் நிலையை சரி செய்ய, மஹா யோகம் குறித்து அறிந்து, பயிற்சியில் சேர்ந்தேன். சிறப்பான பயிற்சி மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த புத்துணர்வை அளிக்கிறது. தற்போது, உயர்நிலை பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இப்பயிற்சி, உங்களை நீங்களே அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்,'' என்றார்.மஹாயோகம் தலைமை ரிஷி ரமேஷ் பேசுகையில், ''மஹாயோகம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று; தியானம், மூச்சு பயிற்சி, யோகாசனம் என்கின்ற நிலைகள் உள்ளன. உடல் மற்றும் மன சுத்திகரிப்பிற்கான சிறந்த பயிற்சி; அனைவரும் பங்கேற்கலாம். உணவு, மதம் போன்ற எந்த விதிகளும் மஹாயோகத்திற்கு பொருந்தாது; இது முற்றிலும் அறிவியல் சார்ந்த பல்வேறு நிரூபணங்களை கொண்ட பயிற்சி,' என்றார்.தொடர்ந்து 45 நிமிடங்கள் தியானம், மூச்சு மற்றும் யோகாசன முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர். பொதுசெயலாளர் திருக்குமரன் பேசுகையில், ''எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களுக்கும் மஹா யோகம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்'' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை