காங்கயம் கல்லுாரியில் மகாத்மியம் - 25 விழா
திருப்பூர்; காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில், 'மகாத்மியம் 25' என்ற பெயரில் திருவிழா நடந்தது. கல்லுாரி தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அலுவலர் மகேந்திர கவுடா முன்னிலை வகித்தார். நடிகர் ஜோ மல்லுாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் ராம்குமார் வரவேற்றார். செயலாளர் வெங்கடாசலம், தாளாளர் ஆனந்தவடிவேல், பொருளாளர் பாலசுப்ரமணியம், இயக்குநர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்கள் அஹிம்சை உறுதி மொழி ஏற்றனர். 'மகாத்மியம் - 25' சார்பில், காந்தி ஆசிரமம், ஆதரவற்றோர் இல்லங்கள் சென்று பார்வையிட்டனர். கலைத்திறன் போட்டிகள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, காதி விற்பனை; காதி உடைகள் அணிந்து பேஷன் ேஷா ஆகியன நடைபெற்றது.பேராசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.