உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெல் காய வைக்க உலர்களம் அமையுங்க

நெல் காய வைக்க உலர்களம் அமையுங்க

உடுமலை; அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில், நெல்லை காய வைக்க, தேவையான உலர்களங்கள் அமைத்து தர வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசன பகுதியான, ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்துார் சுற்றுப்பகுதிகளில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. குறுவை சீசனில், 8 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடியாகிறது.விளைநிலங்களில் அறுவடை செய்த நெல்லை தரம் பிரிக்க, உலர்களங்கள் தேவையாக உள்ளது. ஈரப்பதம் குறைவாக இருந்தால் மட்டுமே, நெல்லை நேரடியாக விற்பனை செய்ய முடியும்.ஆனால், பழைய ஆயக்கட்டு பகுதியில், போதியளவு உலர்களங்கள் இல்லை. இதனால், ஒவ்வொரு சீசனிலும் விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.கிராம இணைப்பு ரோடு உள்ளிட்ட இடங்களில், தார்ப்பாய் விரித்து நெல்லை காய வைக்கின்றனர். இந்த நடைமுறையால் நெல் சேதம் அதிகரிக்கிறது.தற்போது, குமரலிங்கத்தில் பயன்பாட்டிலுள்ள உலர்களம், பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது.நீண்ட காலமாக பயன்பாட்டிலுள்ள இந்த உலர்களம் போதிய பராமரிப்பு இல்லாமல், குண்டும், குழியுமாக மாறி விட்டது.விவசாயிகள் கூறியதாவது: குமரலிங்கம் பகுதியில் போதிய உலர்களங்கள் இல்லை. தற்போது பயன்பாட்டிலுள்ள உலர் களத்தை முழுமையாக புதுப்பித்து தர வேண்டும். மழையில் நனைந்த நெல்லை குறிப்பிட்ட நாட்களுக்குள் காய வைக்காவிட்டால், தரம் பாதிக்கும்.எனவே, பழைய ஆயக்கட்டு பகுதியில், தேவைக்கேற்ப உலர்களங்களும், இருப்பு வைக்க சிறிய குடோன்களும்கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ