உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓட்டலில் சிக்கன் குழம்பு கேட்டவர் மீது தாக்குதல்

ஓட்டலில் சிக்கன் குழம்பு கேட்டவர் மீது தாக்குதல்

திருப்பூர்; பல்லடம், மங்கலம் ரோட்டை சேர்ந்தவர் ஜெயகுமார், 44. இவரது நண்பர் சண்முகவடிவேல், 40. இருவரும் பணி நிமித்தமாக ஈரோடு சென்று விட்டு நேற்று மதியம் ஊத்துக்குளி வழியாக திரும்பி கொண்டிருந்தனர்.கூலிபாளையம் நால் ரோடு அருகே ஓட்டல் ஒன்றில், இருவரும் சாப்பிட சென்றனர். சாப்பிட்டு கொண்டிருந்த போது, ஜெயகுமார் கடை உரிமையாளர் துரைசாமியிடம் சிக்கன் குழம்பு கேட்டார். அதற்கு அவர் குழம்பு தர முடியாது என கூறினார். இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஓட்டல் உரிமையாளர் மற்றும் நண்பர்கள் இருவர் உட்பட, மூவரும் சேர்ந்து, சாப்பிட வந்த ஜெயகுமார் மற்றும் சண்முகவடிவேலை தாக்கினர்; அங்கிருந்த கட்டையை எடுத்தும் தாக்குதல் நடந்தது; அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த, இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.புகாரின் பேரில், ஓட்டல் உரிமையாளர் துரைசாமி, 52 என்பவரை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !