உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வறண்டு காணப்படும் மருள்பட்டி குளம்

வறண்டு காணப்படும் மருள்பட்டி குளம்

உடுமலை: மருள்பட்டி குளத்தின் கரையில், கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை அருகே மருள்பட்டியில், 80 ஏக்கர் பரப்பளவில், குளம் அமைந்துள்ளது. பருவமழை காலத்திலும், பி.ஏ.பி., பாசன காலத்தில், விவசாயிகள் உபரி நீரை குளத்தில் தேக்கி வைக்கின்றனர். சுற்றுப்பகுதியிலுள்ள, கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்துக்கு இக்குளமே ஆதாரமாக உள்ளது. குளத்தில் நீர் இருக்கும் போது, ஏராளமான உள்நாடு, வெளி நாட்டு பறவைகள் காணப்படும். இக்குளம் தற்போது வறண்டு காணப்படும் நிலையில், நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அதே போல், குளத்தின் கரையில், குப்பை, இறைச்சி கழிவுகள், கட்டட கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கழிவுகளால், குளத்து நீர் மாசு அடைவதுடன், நீர் தேக்க பகுதியும் மேடாக மாறும். எனவே, குளத்தின் கரையில், கழிவுகள் கொட்டுவதை தடுக்க, தடுப்பு அமைத்தல் உட்பட பணிகளை பொதுப்பணித்துறையினர், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை