உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேவராயன்பாளையம் கோவிலில் நாளை மாசி மகத் தேரோட்டம்

தேவராயன்பாளையம் கோவிலில் நாளை மாசி மகத் தேரோட்டம்

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், தேவராயன்பாளையத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் நுாற்றாண்டு மாசி மகத் தேரோட்டம் நாளை நடக்கிறது.முன்னதாக கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது. சுவாமி திருவீதி உலா, அபிஷேக ஆராதனை, திருவிளக்கு பூஜை, தீர்த்தக் காவடி, படைக்கலம் எடுத்தல் ஆகியன நடைபெற்று வருகிறது. நாளை(24ம் தேதி) விநாயகருக்கு 108 குடம் அபிஷேகம், கோ பூஜை, ஸ்ரீ காமாட்சி அம்மன் தேருக்கு எழுந்தருளல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்து திருவீதிகளை வலம் வரும்.25ம் தேதி வண்டி தாரை, பரிவேட்டை, 26ம் தேதி தரிசனம், மஞ்சள் நீராட்டு, 27ம் தேதி ஸ்ரீ முத்துக்குமாரசுவாமிக்கு பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை