உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறிதல் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறிதல் தேர்வு

உடுமலை; தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிதல் தேர்வு நடந்தது.மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிதல் தேர்வு உடுமலை சுற்றுப்பகுதியில் நேற்று நடந்தது.இத்தேர்வு, உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.ஆர்., ஞானோதயா மேல்நிலைப்பள்ளி, பெத்தல் பள்ளி, கே.வல்லகுண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அனுகிரகா சர்வதேச பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடந்தது.ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, 400 மாணவர்கள், இந்த கணித திறனறிதல் தேர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உடுமலை சுற்றுப்பகுதியில் கலிலியோ அறிவியல் கழகத்தினர் தேர்வை ஒருங்கிணைத்து நடத்தினர்.மாணவர்களுக்கு அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப, 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டன. வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கத்தொகை பரிசாகவும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.இதன் வாயிலாக, பள்ளி மாணவர்களின் திறமை வெளிக்கொணரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ