உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏழே நிமிடத்தில் தியானம் சாத்தியம்

ஏழே நிமிடத்தில் தியானம் சாத்தியம்

திருப்பூர்' உலக மனநல தினத்தை முன்னிட்டு, திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், ஈஷா அறக்கட்டளை சார்பில், சத்குரு முன்வைத்த 'மிராக்கிள் ஆப் மைண்ட் ' என்ற தியான அனுபவ நிகழ்ச்சி நேற்று நடந்தது. மனநலத்தின் அவசியத்தை விளக்கும் விழிப்புணர்வு காணொலி; சத்குருவின் 'மிராக்கிள் ஆப் மைண்ட்' என்ற ஊக்கு விப்பு படக்காட்சி ஒளிபரப்பானது. கல்லுாரி தலைவர் கோவிந்தராஜூ முன்னிலையில், அனைவரும் “மிராக்கிள் ஆப் மைண்ட்” செயலியை பதிவிறக்கம் செய்து, ஒருங்கிணைந்த தியான அனுபவம் வழங்கப்பட்டது. கல்லுாரி தலைமை ஆலோசகர் ராஜா சண்முகம், துணை தலைவர் பழனிசாமி ஆகியோர் பேசினர். டீன் சம்பத் நன்றி கூறினார். 'மிராக்கிள் ஆப் மைண்ட்' முயற்சி சத்குரு 'மிராக்கிள் ஆப் மைண்ட்' புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலி வழியாக, வெறும் ஏழு நிமிடங்களில் தியானம் செய்யும் வழிகாட்டல் வழங்கப்படுகிறது. காணொலி காட்சியில், சத்குரு பேசுகையில், ''மனம் என்பது ஒரு மகத்தான அதிசயம். தினமும் ஏழு நிமிடங்களை தியானத்திற்கு அர்ப்பணிப்பதன் மூலம், மனிதன் தனது மனதை கட்டுப்படுத்தி, வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த முடியும்,” என்றார். செயலியை, இலவசமாக isha.co/mom என்ற இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை