உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய அலுவலகங்களில் முகாம்

நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய அலுவலகங்களில் முகாம்

உடுமலை,; உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய அலுவலகங்களில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.தமிழக அரசு கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரியம் அமைத்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டங்கள் வாயிலாக, அவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். திட்டத்தின் பலன்கள் பயனாளிக்கும் விரைவில் கிடைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அவ்வகையில், நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு, ஒன்றியம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடக்கிறது. உடுமலை நகரம் மற்றும் ஒன்றிய பகுதி கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு, வரும், 13ம் தேதி, காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.அதே போல், மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில், வரும் 14ம் தேதியும், குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் வரும், 16ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.உறுப்பினர் பதிவுக்கு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, விதவை சான்று, போட்டோ, வருமான சான்று, இருப்பிடச்சான்று மற்றும் மொபைல் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி இம்முகாம்களில், பயனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ