அடக்கம் என்றும் உயர்வு தரும்
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்து வரும் மகாபாரத சொற்பொழிவில், சென்னை ஜெயமூர்த்தி பேசியதாவது:ஒருவருக்கு அடக்கமே என்றும் சிறந்த உயர்வை தரும். எந்த சூழ்நிலையிலும் தன் நிலை இழக்காமல் சொற்களை உபயோகிக்க வேண்டும். நமக்கு என்ன, எப்போது, எவை, எதனால் நடைபெறுகிறது என்று நம் பிறப்பின் போதே நிர்ணயிக்கப்படுகிறது. எந்த செயலும் பிறரால் நமக்கு ஏற்படுவதில்லை. ஆசை பேராசையாக மாறுகின்ற போது அழிவை தருகிறது. அன்பு பேரன்பாக மாறுகின்றபோது ஆனந்தத்தை தருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.