உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அனைத்து பெண்களுக்கும் தாய்மைப்பேறு சாத்தியம்! ஸ்ரீசரண் மெடிக்கல் சென்டர் டாக்டர் மணிமேகலை உறுதி

 அனைத்து பெண்களுக்கும் தாய்மைப்பேறு சாத்தியம்! ஸ்ரீசரண் மெடிக்கல் சென்டர் டாக்டர் மணிமேகலை உறுதி

திருப்பூர்: நல்ல உணவு பழக்கம் மற்றும் சிறந்த வாழ்வியல் முறைகளை கடை பிடித்து, சரியான சிகிச்சை முறைகளை பெறுவதன்மூலம், பெண்கள் அனைவரும் குழந்தை பெற்றெடுக்க முடியும் என்கிறார், ஸ்ரீசரண் மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குனரும் மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவருமான டாக்டர் மணிமேகலை பழனிசாமி. இது குறித்து, அவர் கூறியதாவது: ஆண், பெண் 30 வயதுக்குள் இருந்து, திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது, குழந்தை இல்லை என்றால் பெரிதாக சிகிச்சைகள் தேவைப்படாது. அதுவே, 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, திருமணமாகி ஆறு மாதங்களாகியும் கருத்தரிக்கவில்லை எனில், மருத்துவரை அணுக வேண்டும். கடந்த, 20 ஆண்டுகளில், எங்கள் மருத்துவமனை வாயிலாக, 15 ஆயிரம் தம்பதியர் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். சரியான ஆலோசனைகள், பிசியோ தெரபி, உடல் எடை குறைப்பு பயிற்சிகள், சில அடிப்படை சிகிச்சைகள் மூலமாகவே, 70 சதவீதம் பேர் கருத்தரித்துவிடுகின்றனர். சரியான ஆலோசனைகள் வழங்குவதன்மூலம், பலருக்கு கருத்தரித்தல் சாத்தியமாகி விடுகிறது. தேவையைப்பொறுத்து, ஆண், பெண் இருவருக்கும் ஹார்மோன் பரிசோதனை, விந்தணு பரிசோதனை, கருமுட்டை பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு தேவையான அனைத்துவகையான கட்டமைப்பு வசதிகளும், சர்வதேச தரத்தில் எங்களிடம் உள்ளது. 'டெஸ்ட் டியூப் பேபி' எனப்படும், ஐ.வி.எப்., - ஐ.சி.எஸ்.ஐ., செயற்கை கருத்தரித்தலில், எங்கள் மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது. நல்ல உணவு பழக்கம், வாழ்வியல் முறை மாற்றங்கள், சரியான சிகிச்சை முறைகள் மூலம், அனைவருக்கும் மழலைச்செல்வம் சாத்தியமே. இவ்வாறு, அவர் கூறினார். திருப்பூர் - பி.என்., ரோடு, போயம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே செயல்படும் ஸ்ரீ சரண் செயற்கை கருத்தரித்தல் மையத்தை 82208 00800 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை