உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காயமடைந்தவர்களுக்கு உதவிய எம்.பி.,  ராஜா

காயமடைந்தவர்களுக்கு உதவிய எம்.பி.,  ராஜா

திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார், 21. திருமுருகன்பூண்டி அருகே லாஜிஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து டூவீலரில் கிளம்பி நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திருமுருகன்பூண்டி சிக்னல் அருகே சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 33 என்பவர் ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது அதிவேகமாக டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில், அருண்குமார் ரோட்டின் மறுபுறம் சென்று விழுந்தார். இருவரும் காயமடைந்தனர். இந்நிலையில், திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற தி.மு.க., துணை பொது செயலாளர், எம்.பி., ராஜா, விபத்தில் காயமடைந்தவர்களை, உதவியாளர் வாயிலாக மீட்டு காரில் ஏற்ற முயன்றார். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்ததால், அதில் அனுப்பினர். படுகாயமடைந்த அருண்குமார் கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வழியே சென்ற பெண் போலீஸ் நிர்மலா என்பவர், விபத்தில் காயமடைந்தவர்களை, ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !