முத்துமாரியம்மன் கோவில்3ம் தேதி கும்பாபிேஷகம்
திருப்பூர்: மண்ணரை முத்து விநாயகர், முத்து மாரியம்மன் கோவிலில் வரும் 3ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது. கோவில் கும்பாபிேஷக விழா இன்று காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. நாளை காலை பூர்ணாகுதியுடன் யாகசலை நிர்மாணம் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும் தீபாராதனையும் நடக்கிறது. 2ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், தொடர்ந்து மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறும். வரும், 3ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜைக்கு பின் மகா கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தலைமையில் சிவாச்சார்யார்கள் கும்பாபிேஷகத்தை நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் பட்டுலிங்கம், அறங்காவலர் சரவண பிரகாஷ் ஆகியோர் தலைமையில், விழாக்குழுவினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்துள்ளனர்.