உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி

நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி பாதுகாப்பு கேள்விக்குறி

திருப்பூர்: தீபாவளியையொட்டி, செகண்ட்ஸ் பனியன் வியாபார சந்தையான காதர் பேட்டையில் வழக்கமான ஞாயிறை விட, நேற்று கூட்டம் அலைமோதியது. தீபாவளியையொட்டி அதிகப்படியான மக்கள் கடை வீதி, முக்கிய ரோடுகளில் மக்கள் வருவதால், வாகனங்களை குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். அதை மீறி நிறுத்த கூடிய வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கின்றனர். காதர் பேட்டைக்கு வரகூடிய மக்கள், வாகனங்களை நஞ்சப்பா பள்ளியில் நிறுத்த போலீசார் மூலம், பள்ளியில் அனுமதி பெறப்பட்டு நிறுத்தப்பட்டது. போலீசார் கண்காணிப்பு இல்லாததால், போதை ஆசாமிகள் பள்ளி வளாகத்தில் வலம் வந்தனர். கடை வியாபாரிகளும் தங்களது பொருட்களை உள்ளே வைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். வழக்கமாக பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு வாகனங்கள் நிறுத்த அனுமதி தரப்பட்டது. உரிய இடத்தில், உரிய கண்காணிப்பு இல்லாத காரணத்தால், ஆங்காங்கே சிறுநீர் கழிப்பது போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டனர்.பள்ளியின் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ