உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய கராத்தே போட்டி கதிரவன் பள்ளி கலக்கல்

தேசிய கராத்தே போட்டி கதிரவன் பள்ளி கலக்கல்

திருப்பூர்: சிக்கண்ணா கல்லுாரி உள் விளையாட்டு அரங்கில் மிசு ஹா ஷிடோ ரியு சங்கம் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் சான்றிதழ், பதக்கம், கோப்பைகளை பெற்றனர். கட்டா பிரிவில் ஏழு மாணவர்கள் முதல் பரிசு; ஆறு மாணவர்கள் இரண்டாம் பரிசு; ஏழு மாணவர்கள் மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலாளர் ராஜ்குமார், தாளாளர் ஸ்ரீசரண்யா ராஜ்குமார், முதல்வர் காந்தி பிரியதர்ஷினி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை