உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளிகளில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நிறைவு

பள்ளிகளில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நிறைவு

உடுமலை : உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின், நாட்டுநலப்பணி திட்ட முகாம்கள் நிறைவு பெற்றன.பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பில், நாட்டுநலப்பணி திட்ட முகாம் ஒரு வாரம் அந்தியூரில் நடந்தது. இதன் நிறைவுவிழாவுக்கு பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் தலைமை வகித்தார்.மாணவி அதிக்ஷா வரவேற்றார். பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் இளங்கோ 'தமிழரின் கவிதை சிந்தனைகள்' என்ற தலைப்பில் பேசினர்.பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முனியப்பன், 'இயற்கையை பேணுவோம்' என்ற தலைப்பில் பேசினார். உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் காளீஸ்வரர் ராஜ் போட்டித்தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.* குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதன் நிறைவு விழாவில் என்.எஸ்.எஸ்., அலுவலர் ரமேஷ், முகாம் குறித்த அறிக்கையை வாசித்தார். தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார்.குமரலிங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் கணேஷ் பாபு, போதைபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.* புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட முகாம், மொடக்குபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது. முகாம் நிறைவாக அப்பள்ளி வகுப்பறைகள் துாய்மைப்படுத்தப்பட்டன. நிறைவுவிழாவில் காந்திகலா நிலைய பள்ளி தலைமையாசிரியர் செந்தில்வேல் தலைமை வகித்தார். ஆசிரியர் மகேந்திரபாபு வரவேற்றார். திட்ட அலுவலர் அசோக்குமார் முகாம் அறிக்கை வாசித்தார். பள்ளி ஆசிரியர்கள், நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் மகாமில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை