துர்காதேவி பிரதிஷ்டையுடன் நவராத்திரி வழிபாடு
பல்லடம்; சூலுாரில் வசிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் இணைந்து, ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடி வருகின்றனர். காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது. நேற்று காலை, நவராத்திரியை முன்னிட்டு துர்கா தேவி சிலை பிரதிஷ்டை செய்யும் பணி துவங்கியது. இதனை முன்னிட்டு, காரணம்பேட்டை பெருமாள் கோவிலுக்கு வந்த வட மாநில குடும்பத்தினர், வழிபாடு நடத்திய பின், பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.