உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெ.கோவிலில் புதிய குடிநீர் திட்டம் துவக்கம்

வெ.கோவிலில் புதிய குடிநீர் திட்டம் துவக்கம்

வெள்ளகோவில்; வெள்ளகோவில் நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டப் பணி துவங்கப்பட்டது. வெள்ளகோவில் நகராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர அமராவதி ஆற்றிலிருந்தும் புதுப்பை பகுதியில் குடிநீர் பெற்று வழங்கப்படுகிறது. இதில், தற்போது, 30 லட்சம் லிட்டர் அளவு கூடுதலாக குடிநீர் பெற்று வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இப்பணியை அமைச்சர் சாமிநாதன் நேற்று துவங்கி வைத்தார். நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 13.70 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நகராட்சி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட முழு நேர ரேஷன் கடையையும் அமைச்சர் திறந்து வைத்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், திருப்பூர் மாநகராட்சி, 4ம் மண்டல குழு தலைவர் பத்மநாபன், வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி, கமிஷனர் மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ