உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் வடக்கில் புதிய வருவாய் பிர்கா

திருப்பூர் வடக்கில் புதிய வருவாய் பிர்கா

திருப்பூர்: மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக, திருப்பூர் தாலுகா வடக்கு மற்றும் தெற்கு என இரு தாலுகாக்களாக பிரிக்கப்பட்டது. அவ்வகையில், வடக்கு தாலுகா உருவாக்கப்பட்ட போது, இதில் ஒரு வருவாய் உள்வட்டம் மட்டுமே இருந்த காரணத்தால், வேலம்பாளையம் உள்வட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, திருப்பூர் வடக்கு பிர்க்காவில் தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை ஆகிய மூன்று வருவாய் கிராமங்களும், வேலம்பாளையம் உள்வட்டத்தில், வேலம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம் மற்றும் செட்டிபாளையம் ஆகிய நான்கு வருவாய் கிராமங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், புதிதாக 25 வருவாய் கிராமங்களும், 50 வருவாய் உள்வட்டங்களும் அமைக்கப்படும் என அமைச்சர் சட்டசபை கூட்டத்தில் தெரிவித்தார். அதன்படி, திருப்பூர் வடக்கு தாலுகா, வடக்கு உள்வட்டத்தில் இடம் பெற்றுள்ள நெருப்பெரிச்சல் வருவாய் கிராமத்தையும், வேலம்பாளையம் உள்வட்டத்தில் இடம் பெற்றுள்ள கணக்கம்பாளையம் வருவாய் கிராமத்தையும் இணைத்து நெருப்பெரிச்சல் வருவாய் உள்வட்டம் உருவாக்கப்படுகிறது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் துறையினர் அலுவல் ரீதியான பணிகளைத் துவங்கியுள்ளனர். விரைவில், வருவாய் ஆய்வாளர் பணியிடம் நியமிக்கப்பட்டு புதிய அமைப்பு யெல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. மக்கள் ஏமாற்றம் திருப்பூர் வடக்கு பிர்க்காவைப் பொறுத்தவரை, தொட்டிபாளையம் என்பது மிகப் பெரிய வருவாய் கிராமம். திருப்பூர் நகரின் வடக்கு பகுதி முதல் பி.என். ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இதில் அடங்கியுள்ளன. ஏறத்தாழ, 2 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இதனை இரண்டு வருவாய் கிராமங்களாகப் பிரித்தால் நிர்வாகம் எளிதாகவும், பொதுமக்களுக்கு வசதியாகவும் இருக்கும். ஆனால், இதற்கான எந்த அறிவிப்பும் இல்லாததால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை