உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து

அவிநாசி:கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் விழா தெக்கலுார் ரோட்டரி சங்கம் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.அவிநாசி ஒன்றியம், தெக்கலுார் ஊராட்சியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் விழா தெக்கலுார் ரோட்டரி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மண்டல ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பைகளை வழங்கினார்.உதவி கவர்னர் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.முன்னாள் தலைவர் நடராஜன், பொருளாளர் பிரபு, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். செயலாளர் சிவக்குமார் நன்றி உரை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ