உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆட்சி மொழி சட்ட வார விழா

 ஆட்சி மொழி சட்ட வார விழா

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சி மொழி சட்ட வார விழா, கடந்த, 17ல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று (27ம் தேதி) வரை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கடந்த, 17ம் தேதி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு பணியாளர்களுக்கு ஆட்சி மொழி வரலாறு, சட்டம், தமிழில் குறிப்புகள் எழுதுவது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 22ம் தேதி, அவிநாசி அருகே வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரியில் பட்டிமன்றம் நடந்தது. 23ம் தேதி, வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளை அழைத்து, கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது; இதில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த 24ல், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆர்.டி.ஓ. சிவப்பிரகாஷ், கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் சுந்தர், திருப்பூர் வடக்கு தாசில்தார் கண்ணாமணி மற்றும் தமிழ் அமைப்புகள், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம், பார்க் ரோடு வழியாக மீண்டும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் முன், சிலம்பம், தப்பாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவு நாளான இன்று, திருப்பூர் அருகே குன்னாங்கல்பாளையத்திலுள்ள டாப்லைட் நுாலகத்தில், காலை, 10:00 மணிக்கு தமிழ் அமைப்பினருடன் ஆட்சி மொழி சட்ட விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை